முனைவர ப அனுராதா

Faculty Profile

முனைவர ப அனுராதா

M.A., M. Phil., PhD.,

Assistant Professor

Introduction

முனைவர் பி.அனுராதா உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை.  KPR கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, கோவை. இளங்கலை(BA) , முதுகலை(MA)  பட்டங்களை திருப்பூர் எல்.ஆர்.ஜி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பல்கலைக் கழக அளவில் நான்காமிடம் பெற்றுத் தேர்ச்சி பெற்று, ஆய்வியல் நிறைஞர் (MPhil), முனைவர் பட்ட(PhD) ஆய்வினை ஆகிய பட்டங்களை கோவை, அரசு கலைக் கல்லூரியில் மேற்கொண்டார். சங்க இலக்கியம், இக்கால இலக்கியம், புதுக்கவிதை  போன்ற துறைகளில் திறம்பட செயல்பட்டு சமுதாய நோக்குடைய நிகழ்வுகளில்  கவியரங்கம், பட்டிமன்றம், தனிப் பேச்சு ஆகியவற்றில் நடுவராகவும் பேச்சாளராகவும் செயலாற்றி வருகிறார். செம்மொழி மன்றத்தின் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் கம்பன் கலைக்கூடத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும், தமிழ்த்தேனீக்கள்  தமிழ் மன்றத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும், கவிதைப் பெட்டகம் இதழின் செயலாளராகவும், ஆலோசகராகவும் செயலாற்றி வருகிறார். 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிஞருக்கான அம்மா விருதினைப் பெற்றுள்ளார். கவிமுகில்,கவிப்பேரரசி,கவி நிலா,தமிழ்ச்சுடர்,ஆளுமை ஆசிரியர் போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.வானொலி, தொலைக்காட்சி நிகழ்வுகள் பலவற்றில் பேசி வருகிறார்.  தமது கல்விப் பணியில் 8 வருடங்களாகப் பாடத்திட்டக்குழு உறுப்பினராக மாணவர்களின் பாடபுத்தக நூலாக்கப் பணிகளில் சிறப்பாக செயலாற்றியுள்ளார். KPR கலை அறிவியல் கல்லூரியின் பைந்தமிழ் மன்றத்தின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வுத்துறைக்கு ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.