Dr. P. Muthukumaravadivel

Faculty Profile

முனைவர்.ப.முத்துக்குமாரவடிவேல்

B.Lit., MA., MPhil., Ph.D.,

Associate Professor & HoD

NSS Officer 

Introduction

முனைவர் ப. முத்துக்குமார வடிவேல் இணைப் பேராசிரியர்& தமிழ்த்துறைத் தலைவர். கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி. கோயம்புத்தூர். இளங்கலை (பி.லிட்), முதுகலை (எம்.ஏ), ஆய்வியல் நிறைஞர் (எம்.பிஃல்), மெய்ப்பொருள் நிறைஞர்(பி.ஹெச்.டி) ஆகிய பட்டங்களை முறையாக தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரி, பேரூரில்.முழுநேர வகுப்பில் கற்று தேர்ந்து. கோவில் வழிபாடு-ஓர் ஆய்வு, அருள்மிகு செண்பகவல்லி உடனமர் சோளீஸ்வரர் பெருமான் திருக்கோவில் ஒரு- ஆய்வு, மூவர் தேவாரத்தில் நமச்சிவாயப் பதிகம், திருமுருகாற்றுப்படை சமுதாயக் கூறுகள் என்னும் தலைப்புகளில் ஆய்வுகள் மேற்கொண்டு. பாரதியார் பல்கலைக்கழக தேர்வுக் குழு மதிப்பீட்டில் உயர் மதிப்புடையது(Highly commanded) என்ன நிலையில் சிறப்புத் தகுதி பெற்று. பக்தி இலக்கியம், இக்கால இலக்கியம், புதுக்கவிதை மற்றும் பதிப்புத் துறையில் திறம்பட செயல்பட்டு சமுதாய நோக்குடைய நிகழ்வுகளை கவியரங்கம், பட்டிமன்றம், தனிப் பேச்சு, ஆகியவற்றின் மூலமாக பணியாற்றி வருகிறார். சைவ சித்தாந்த பெருமன்றத்தின் உறுப்பினராகவும், பொள்ளாச்சி பதினெண் சித்தர்  மருத்துவ சங்கத்தில் செயலராகவும், ஆலோசகராகவும்,கே.பி.ஆர் குறிஞ்சிதமிழ் சங்கத்தின் இணைச் செயலாளராகவும் தமது திறமைகளை திறம்பட செய்து வருகிறார், மதுரை காமராஜர் பல்கலை கழகத்தின் வாயிலாக சைவ சித்தாந்த பட்டமும் பெற்றுள்ளார். தமது கல்விப் பணியில்,  நாட்டு நலப்பணித் திட்ட அலுவலராக சிறப்பாக செயலாற்றி வருகின்றார். கேபிஆர் கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஆகவும் உள்ளார்